பலத்த பாதுகாப்புடன் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான பணி தொடக்கம்!

  அனிதா   | Last Modified : 15 Jun, 2019 01:48 pm
electricity-high-tower-work-started

கருமத்தம்பட்டியில் உயர் மின் கோபுரம் அமைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர் மின் கோபுரம் அமைக்க நிலஅளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், அங்குள்ள உயர் மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், நில அளவீடு செய்யும் பணிகள் செம்மாண்டம் பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close