சிலிண்டர் வெடிப்பு: ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்!

  அனிதா   | Last Modified : 15 Jun, 2019 04:07 pm
cylinder-explosion-2-person-injured

மதுரையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  மகபூப்பாளையம் 5வது தெருவில் குமார் என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறர். இன்று காலை உணவு சமைத்து கொண்டிருந்தபோது, திடிரென சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமாரின் மகன் பெத்துராஜ் அதனை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது திடிரென சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 

இதில் பெத்துராஜ் உடலில் தீபற்றியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பெத்துராஜை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மீட்பு பணியின் போது, மீண்டும் சிலிண்டர் தீப்பற்றியதில் ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் வீட்டில் உள்ள சிலிண்டர்களை மீட்டு வருகின்றனர். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close