விமானம் மூலம் நூதன முறையில் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் !

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 09:41 am
foreign-currency-seized-at-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.20 லட்சம் இந்திய மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த  ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது  சென்னையை சேர்ந்த அலி அப்பாஸ் என்பவர் தனது சூட்கேசில் 19,82,709 லட்சம் ரூபாய் இந்திய மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை  மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்த சவுதி ரியால், யூரோ, ஜப்பான் என்,  ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர்,  சுவிஸ் பிராங்க் என 374 நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close