கருப்பு பட்டை அணிந்து கண்டனம் தெரிவிக்கும் மருத்துவர்கள்!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 09:25 am
doctors-condemn-by-wearing-black-batch

சென்னையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை  மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். போராட்டம் நடத்தினார் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நோயாளிகள் பாதிக்காத வண்ணம் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில மருத்துவமனைகளில் 1 மணி நேரம் ஆர்பாட்டம் நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close