ரவுடிகளிடையே மோதல்: துப்பாக்கியால் சுட்டவர் கைது

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 09:32 am
rowdy-ramesh-arrested-for-firing

சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையே நடைபெற்ற மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை எண்ணூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரமேஷ் என்பவர் செந்திலை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த செந்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, செந்திலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் உறுதி என தெரியவந்ததையடுத்து போலீசார் ரவுடி ரமேஷை தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close