குடிபோதையால் விபரீதம்: தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 10:53 am
couple-suicide-in-chennai

சென்னை ஓட்டேரியில் குடி போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஓட்டேரி அருகே செல்லப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 45). இவருக்கு தீபா (வயது 38) என்ற மனைவியும் ஆரிஷ் (வயது 17) மற்றும் லோகேஷ் (வயது 14) என்ற 2 மகன்களும் உள்ளனா். தன்ராஜ் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் தன்ராஜ் தனது நண்பருடன் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் தீபாவிற்கும் தன்ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் தீபா தனது கணவர் தன்ராஜ் கண்எதிரே  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கண் முன்னே இறந்த பயத்தில் தன்ராஜ்யும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் கணவன், மனைவியிடையே சொத்து தகராறு  ஏற்பட்டு அதனால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close