ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு: செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல்!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 01:01 pm
suicide-threatens-upon-cell-phone-tower

சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை வேளச்சேரியில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான 1.15 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மக்கள் வீடுகள், கடைகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ரயில்வேக்கு சொந்தமான இடம் என்பதால் மக்கள் வெளியேறும் படி கூறப்பட்டதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னை இந்திரா குடிசைவாழ் நல சங்கம் தலைவர் தனஞ்செயன் 2004 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 14 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில்  இது அனைத்தும் ரயில்வேக்கு சொந்தமான இடம் எனவும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. 

உச்சநீதிமன்றமும் ரயில்வேதுறைக்கு சொந்தமான இடம் என்பதால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக்கோரி கடந்த பிப்ரிவரி 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து இடத்தை காலி செய்ய கால அவகாசம் அளிக்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் இடத்தை காலி செய்துதர 6 வார கால அவகாசமும் கூடுதலாக 4 வார கால அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்பகுதி மக்கள் இடத்தை காலி செய்யாததால், இன்று வருவாய்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, கட்டடங்களை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்தக்கோரி தனஞ்செயன் என்பவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

தொடர்ந்து, போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிநடைபெற்று வருகிறது. இதனிடையே, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close