இரவு நேரத்தில் பெண் குத்திக் கொலை!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 01:02 pm
woman-killed

கும்பகோணம் அருகே  வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மநபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் வசித்து வந்தவர் வசந்தி. இவரது கணவர் பாண்டியன் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா (வயது 14) என்ற மகள் உள்ளார். நேற்றிரவு சந்தியா அருகில் உள்ள அவரது பாட்டி வீட்டில் சென்று தங்கியுள்ளார்.  வசந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்த சந்தியா, கதவு பூட்டப்பட்டிருந்ததையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது, வசந்தி முகத்தில் கத்தியால் குத்துப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்தியா கதறி  அழுதுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close