மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 01:32 pm
young-man-killed-on-main-road

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (22). இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் ஆறுமுகத்தை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது, அருகில் இருந்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கொலை செய்த மூன்று நபர்களில் ஒருவரை சம்பவ இடத்திலேயே மடக்கி பிடித்தார். பிடிப்பட்ட பாலமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பவம் இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் மீது செல்போன் திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உட்பட  4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல்லாக்குளம் பகுதியில் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மக்கள் அதிகமாக செல்லும் பேருந்து நிலையம் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close