இரு சமூகத்தினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 03:10 pm
conflict-between-two-communities

மதுரை கொடுக்கம்பட்டியில் திருவிழாவின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடுக்கம்பட்டி என்ற கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, இரு சமூகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் எதிர் தரப்பினரை கடுமையான ஆயுதங்கள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதில், ரம்பு, தங்கையா, சுபாஷ், திவாகர் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

உறவினர்கள் அவர்களை மீட்டு மதுரை  ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மருத்துவமனை முன்பு பனங்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரம்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து, கொடுக்கம்பட்டி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோவில் திருவிழாவில் தாக்குதல் நடத்தியதாக 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close