அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 04:51 pm
water-shortages-in-government-hospitals-patients-suffering

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததாலும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால், குடியிருப்புகளில் வசித்து வருவோர், விடுதிகளில் தங்குபவர்கள், உணவகங்கள் என பலதரப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில், அரசு மருத்துவமனைகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் தண்ணீர் காலை மற்றும் மாலை என இரு வேளை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண்பதற்கு வரும் உறவினர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close