3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை 

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 08:32 am
3-statues-were-looted

இடைக்காட்டூர் பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியில் சிறப்பு பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close