பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்ல அனுமதி பெற வேண்டும்..!

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 02:03 pm
permission-should-be-obtained-to-school-autos

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகளை  அனுமதி பெற்ற வாகனத்தில் மட்டுமே  ஏற்றிச் செல்ல வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கும்பகோணத்தில் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு புத்தகப் பைகளை வெளியே தொங்கவிட்டப்படி செல்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலர் அருணாச்சலம் இன்று காலை 8 மணி அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்தார். 

அப்போது, அதிக குழந்தைகளுடன் போக்குவரத்துக்கு இடையூறாக வெளியில் புத்தகப்பைகளை தொங்கவிட்டப்படி சென்ற 4 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு தலை 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டன. 

இதையடுத்து, பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகே குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்களும், கல்வி நிர்வாகமும் ஒத்துழைப்பு தரும்படி போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் கேட்டுக்கொண்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close