உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனை: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 09:32 am
untreated-in-a-timely-manner-hospital-plus-2-student-dies

ஆரணி அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலக்கழிக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிளஸ் 2  மாணவன் அரி. இவருக்கு நேற்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அருகே உள்ள ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அங்கும், இங்கும் கூட்டி செல்லுமாறு அலக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஒருவழியாக சிகிச்சை அளிக்க கூட்டி சென்ற நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலக்கழிக்கப்பட்டதாலேயே மாணவன் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close