மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 12:53 pm
mother-dies-in-front-of-daughter-s-eyes-cctv-footage

சேலம், தாரமங்கலத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதிய விபத்தில் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார். இவர் தனது 12 வயது மகள் கிரேவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல், தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, தாரமங்கலம் பிரதான சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று ராணியின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி லாரி டயரில் சிக்கிய சம்பவ இடத்திலேயே, மகளின் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். கண்ணிமைக்கு நொடியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு, தப்பியோடிய லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close