கோவையில் 1998ஆம் ஆண்டுபோல பெரும் தாக்குதலுக்குத் திட்டம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 04:51 pm
nia-officials-raided-again-in-coimbatore

கோவை குனியமுத்தூர் பகுதியில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். 

கோவையில் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் 7க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது, தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அசாரூதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தீவிரவாதிகள் அனைவரும் இணைந்து கடந்த 1998ஆண்டு கோவையில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் போல தற்போதும் கோவை மாநகரில் உள்ள 6 ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது

இந்நிலையில், இன்று குனியமுத்தூர் சாந்தி நகர் பகுதியில் சினோஜ் என்பவரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அசாரூதீனை என்.ஐ.ஏ அதிகாரிகள் கொச்சியிலிருந்து அழைத்துவந்து கோவையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இன்றைய சோதனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close