கோவையில்  இதயத்திற்கு பயன் தரும்  யோகா பயிற்சிகள் நடைபெற்றன!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 01:07 pm
yoga-event-in-coimbatore

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் ஆரோக்கிய இதயத்திற்கு பயனுள்ள யோகா எனும் தலைப்பில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன..

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இதனை முன்னிட்டு  யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  கோவை சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்.சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் இதயத்திற்கு யோகா எனும் தலைப்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், ஆர்.வி.எஸ்.குழுமங்களின் நிறுவனர் ஆர்.வி.குப்புசாமி தலைமையில், டாக்டர் ராமசாமி, ஸ்ரீவத்சன் ஆகியோர்  முன்னிலையில் யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து இதில்,கலந்து கொண்ட கல்லுாரி மாணவ‚ மாணவிகளுக்கு யோகாவின் அவசியம் குறித்தும்‚ யோகா செய்யும் முறைகள் குறித்து செயல் விளக்கம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close