சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம்  ஒப்படைத்த முதியவர்!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 04:02 pm
the-old-man-handed-the-money-lying-on-the-road-in-coimbatore

கோவை அருகே சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம்  ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கோவை சின்ன வேடம்பட்டி பகுதியிலுள்ள உடையாம்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் லக்ஷ்மணன் (80). இவர் பூ மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது.

இதை கண்ட முதியவர் அந்த பர்ஸை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஒப்படைத்துள்ளார். இதையடுத்து காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து பந்தய சாலை சி2 காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பந்தய சாலை சி2 போலிசார், மணி பர்ஸுக்குள் இருந்த அடையாள அட்டை அடிப்படையில் பணத்தை தொலைத்த ரவிச்சந்திரன் என்பவரை அழைத்து அவரிடம் பர்ஸில் இருந்த ஆறாயிரத்து நூற்றி அறுபது ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர்.  

அதுமட்டுமின்றி, ஏழ்மையில் வாடும் இந்த முதியவர் சாலையில் கண்டு எடுத்த  பணத்தை திருப்பி கொடுத்த செயல், அதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை ஆகிய செயல்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த செயலால் முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close