மழை வேண்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் யாகம்!

  அனிதா   | Last Modified : 22 Jun, 2019 09:08 am
ministers-mlas-pray-for-rain

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மழை வேண்டி யாகம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதிமுக கழக நிர்வாகிகள் மழை வேண்டி யாகம் செய்யும் படி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவை தொடர்ந்து தமிழத்தின் பல்வேறு கோயில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மழை வேண்டி யாகம் நடத்தி வருகின்றனர். கடலூரில் அருள்மிகு பாடலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மழைவேண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதேபோல், பசுபதீஸ்வரர் கோவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் யாகம் நடைபெற்று வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close