அமைச்சர் வழிபாடு: பசு மாடு மிரண்டதால் பரபரப்பு!

  அனிதா   | Last Modified : 22 Jun, 2019 10:54 am
minister-worship-the-cow-was-disturbed

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்ற கோ பூஜையின் போது பசுமாடு மிரண்டு உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக கழகம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, இன்று பல்வேறு கோயில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு யாகங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் வருண யாகம் நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து கோ பூஜை நடைபெற்றது. கோ பூஜையின் போது சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்கி பூஜை செய்த போது, பாசு மாடு திடிரென மிரண்டு உதைத்தது. இதனால் சுற்றி இருந்தவர்கள் நாலாபுரமும் சிதறி ஓடினர். இதில் விக்னேஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. 

சிறிது நேர பரபரப்பிற்கு பின்னர், அஸ்வ பூஜை மற்றும் கஜ பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close