எத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது? கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

  அனிதா   | Last Modified : 22 Jun, 2019 12:17 pm
the-dmk-should-contest-alone-in-the-local-elections

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது? என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், இதனை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையிலும், வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

திருச்சி அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்றும் இதுகுறித்து திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்ததோடு, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது என கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close