சேலத்தில் தண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 05:53 pm
siege-of-panchayat-office-asking-for-water-in-salem

சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன் பட்டியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியும், சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தரக்கோரியும்,   சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதேபோன்று சேலம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் நிலவுவதால்,  மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் அலையும் நிலை நீடித்து வருகிறது.  இந்த நிலையில் சேலம் மாநகராட்சி  எல்லையையொட்டி,  ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி  ஊராட்சியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததை கண்டித்தும்,சாலை,  சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் மாருதி நகர், ஐயன் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர், கொண்டப்பநாயகன் பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த பகுதி மக்கள்: மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிக்கே  குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் , பத்து நாட்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படுவதால், அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். அதோடு  மாருதி நகர், ஐயன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தராததால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  குற்றம்சாட்டினர்.  திடிரென கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close