பனமரத்துப்பட்டி ஏரியில் சேலம் எம்பி ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 05:53 pm
salem-mb-studied-in-panamarathupatti-lake

சேலம் பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள ஏரியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று(22ஜூன்)  நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் பஞ்சத்தை தீர்த்து வந்த பனமரத்துப்பட்டி ஏரி கடந்த சில வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. மேலும் சமீப காலமாக சேலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் அந்த ஏரியில் இருக்கும் நீரை பயன்படுத்த திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் முன்வந்துள்ளார். இதனையடுத்து அந்த ஏரியை பார்வையிட்ட எம்பி, ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.  ஆய்வின்போது திமுக மாவட்ட பொருளாளர் வீரபாண்டி ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close