ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை செய்ததில் முறைகேடு: முன்னாள் குருக்கள் கைது

  அனிதா   | Last Modified : 23 Jun, 2019 12:10 pm
statue-case-former-gurus-arrested

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்து முன்னாள் குருக்கள் நேற்று கைது செய்யப்பட்டார்.  

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட  சிலை திருட்டு தடுப்புப்பிரிவு  காவல் துறையினர், பலரை கைது செய்துள்ளனர். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இவ்வாலயத்தில் பணிபுரிந்த முன்னாள் குருக்கள் ராஜப்பா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, வெளிநாட்டில் ராஜப்பா இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் இந்தியா வந்தால் கைது செய்யும்படி இமிகிரேஷன் அலுவலர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று கனடாவில் இருந்து மும்பை திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல்துறையினர் கைது தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிலை தடுப்பு காவல்துறையினர் அவரை தங்கள் பொறுப்பில் எடுத்து, நேற்றிரவே கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். 

வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close