8 மணி நேரம் வீணாக சாலையில் சென்ற குடிநீர்: புகார் அளித்தும் மெத்தனம்.

  அனிதா   | Last Modified : 23 Jun, 2019 01:24 pm
wasted-drinking-water-on-the-road

சேலத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சுமார் 8 மணி நேரமாக சாலையிலும், சாக்கடையிலும் வீணாக குடிநீர் சென்ற காட்சிகள் அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் சென்று  குளம்போல் தேங்கியதோடு, சாக்கடையில் கலந்து வீணானது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் காலம் தாழ்த்தியது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த சாலையை கடந்த சென்ற வாகன ஓட்டுகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் தண்ணீர் வீணாக செல்வதை கண்டு வேதனையுடன் சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close