சேலம் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி, குடும்பத்துடன்  தீக்குளிக்க முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 05:18 pm
the-farmer-is-trying-to-suicide-attempt-with-his-family

சேலம் மாவட்டம் நாழிக்கல் பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவரது  நிலத்தை சிலர் அபகரித்துக் கொண்டதாக  மல்லூர் காவல்நிலையத்தில் சமீபத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் பழனிசாமிக்கு சதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இதுவரை எதிர்தரப்பினர் அபகரித்த நிலத்தை பழனிச்சாமிக்கு திருப்பி வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். காவல்துறையினரும் அவருடைய நிலத்தை மீட்டுத் தருவதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கூறப்பிடுகிறது

இதையடுத்து செய்வதறியாத தவித்து வந்த பழனிச்சாமி, அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த  சம்பவத்தால் அப்பகுதியில்  சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close