ராஜராஜ சோழன் நினைவிடத்தைச் சுற்றி மணிமண்டபம் கட்ட வேண்டும் : இந்து மகா சபை 

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 05:25 pm
build-a-manimandapam-around-the-rajaraja-chola-memorial-hindu-maha-sabha

கும்பகோணம் உடையாளூர் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜ சோழன் நினைவிடத்தை சுற்றி மணிமண்டபம் கட்ட வேண்டும் என இந்து மகா சபை சார்பில் கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம்  இந்து மகா சபையின்  தலைவர் கலைவாணன் தலைமையில் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் நிரஞ்சன், பாலா, மணிகண்டன், விக்னேஷ்   மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து உதவி ஆட்சியர் வீராச்சாமியிடம் ராஜராஜ சோழன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர்.

அந்த மனுவில்: உடையாளூர் கிரமத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை சுற்றி மணிமண்டபம் கட்டப்பட  வேண்டும். அதோடு கும்பகோணம் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள ரவுண்டா பகுதியில் ராஜராஜ சோழனுடைய உருவச் சிலையை அமைக்க வேண்டும். 

மேலும் தமிழகத்தில் முக்கியமான சிவாலயங்களில் மாமன்னர் ராஜராஜ சோழனுடைய வரலாறு தெரியும் விதமாக அறிவிப்பு பலகைகள் அமைத்து வெளியூர் மற்றும் வெளி நாடுகளுலிருந்து சுற்றுலா வரும் அனைவரும்  ராஜராஜ சோழனின் வரலாற்றை அறிந்துகொள்ள செய்ய வேண்டும்.

அதேபோல உடையாளூரில் இருக்கும் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு வாரம் 2 முறை  சிறப்பான அபிஷேகம் நடத்தப்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close