காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 08:49 am
young-girl-stabbed-with-knife

கோவையில் காதல் பிரச்சனை காரணமாக இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கணினி பயிற்சி பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவி அமிர்தா(20) என்பவரை சுரேஷ் (22) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தும்போது அருகில் இருந்த சக மாணவர்கள் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் சுரேசை சிறைபிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவி அமிர்தா மற்றும் சக மாணவர் இருவருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து ஆர். எஸ் புரம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாணவி அமிர்தா மற்றும் சுரேஷ் இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்து வந்தநிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அமிர்தா சுரேசிடம் பழகுவதை தவிர்த்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நேற்று அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை தயார் செய்து அவரை குத்தியுள்ளார். சுரேஷை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close