கள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 10:11 am
rowdy-anand-murdered-in-love-affair

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கள்ள காதல் பிரச்சனையில் ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பள்ளிவிடை பகுதியை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ள காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்துகொண்ட விஜய், ஆனந்தை கண்டித்து அனுப்பியுள்ளார். ஆனால், ஆனந்த் இதனை பொருட்படுத்தாமல் மீண்டும் அவரது மனைவியுடன் பேசி வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்றிரவு ஆனந்த் வீட்டிற்கு சென்ற விஜய் தூங்கி கொண்டிருந்த ஆனந்தின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த விஜய்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட ஆனந்த் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close