அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபாசமாக பேசிய இளைஞர் கைது!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 01:05 pm
young-man-arrested-by-car-accident

சென்னை நீலாங்கரை பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியதோடு, வழிமறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரை ஆபாசமாக பேசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை நீலாங்கரை பகுதியில் மின்னல் வேகத்தில் சென்ற கார் ஒன்று 7 இரு சக்கர வாகனங்களையும் ஒரு ஆட்டோவை இடித்து தள்ளி விபத்துக்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று சுற்றுசுவர் ஒன்றில் மோதி நின்றது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  இதனை கண்டு ஓட்டுநரை மீட்டு விசாரித்தபோது, காரை ஓட்டி வந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் காவலர்களை ஆபாசமாக பேசியதோடு, அவர்களை தாக்கியும் உள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close