நடிகர் விஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி! 

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 12:57 pm
rs-86-lakhs-cheating-on-actor-vishal-s-father

நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல் குவாரி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவரிடம் மதுரையை சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலு (56) என்பவர் அவரது குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி தருவதாக கூறியதையடுத்து ரூ. 86 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த குவாரி உரிமையாளர் கருங்கல் ஜல்லியை அனுப்பி வைக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.ரெட்டி இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வடிவேலுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close