டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 01:45 pm
road-accident-in-coimbatore

மதுபோதையில் இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கோவையிலிருந்து ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஜருகண்டி என்ற பகுதியில் அரசு மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் மது அருந்திவிட்டு போதையில் வரும் நபர்களால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தடாகம் பகுதியை சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவரின் மனைவி சோபனா அவரது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ஜருகண்டி பகுதியிலிருந்து  மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் அவரது வாகனத்தின் பின்னே மோதி விபத்துக்குள்ளானதில், சோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்தடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மதுபானக்கடையை அகற்றக்கோரி பெண்ணின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் நிகழ்ந்த சாலைவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close