சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 03:51 pm
male-body-found-on-the-roof-of-the-building

சென்னை ரிப்பன் மாளிகை அருகே மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள், பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சிறிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேற்கூரையின் மீது அரை நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 40 வயது மதிக்க தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த நபரின் கழுத்தில் டெலிபோன் வயர் சிக்கியிருந்ததால் தற்கொலையா? கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close