மதம் மாறிய மகளை மீட்டு தரக் கோரி தாய் புகார்!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 04:29 pm
request-to-redeem-religious-converted-daughter

கோவையில், மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி இளம் பெண்ணின் தாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். கணவரை பிரிந்து தனது தம்பி வீட்டில் வசித்து வரும் முனிரத்தினத்திற்கு பூங்கோதை (22) என்ற மகள் இருக்கிறார். கோவை கற்பகம் கல்லூரியில் படிப்பை முடித்த பூங்கோதை, திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறி தனது நண்பர்கள் பாரதி மற்றும் சாராவுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். 

இந்நிலையில் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த பூங்கோதை கழுத்தில் சிலுவை அணிந்து வந்துள்ளார். இது குறித்து முனிரத்தினம் விசாரித்த போது, தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறிய பூங்கோதை யாரிடமும் கூறாமல் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதையடுத்து முனிரத்தினம் சூலூர் காவல் நிலையத்தில் தனது மகள் திடிரென மதம் மாறி இருப்பதாகவும், இதில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் பூங்கோதையை போலீசார் அழைத்து விசாரித்த போது, தனது சுய விருப்பத்தின் படியே மதம் மாறியதாக அவர் கூறி இருக்கிறார். மேலும் பூங்கோதை மேஜர் என்பதால் அவரின் விருப்பப்படியே மீண்டும் திருச்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், மதம் மாறிய தன் மகள் பூங்கோதையை மீட்டு தரும்படி முனிரத்தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close