மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது!

  அனிதா   | Last Modified : 25 Jun, 2019 05:04 pm
five-person-arrested-for-threatening-students

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்குமாறு கூறி கட்டாயப்படுத்தி மிரட்டிய இளைஞர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது கபீர். இவர் தனது நண்பர்களான வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து பள்ளி செல்லும் மாணவிகளை வழிமறித்து, செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்து வந்தனர்.

மேலும் மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து, பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், முகமது ரியாஸ், வசந்தகுமார், முகமது அர்ஷத், கமருதீன், முகமது கபீர் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டியதோடு, தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் முகமது கபீர் மட்டும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜே.எம்.ல் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close