சென்னை பரங்கிமலையில் கேட்பாரற்ற வாகனத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்!

  கண்மணி   | Last Modified : 26 Jun, 2019 05:01 pm
100kg-of-cannabis-seized-in-parangimalai-chennai

சமீப காலமாக சென்னையில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.  இது தொடர்பாக காவல் துறை மிக விழிப்பாக இருந்து போதை புழக்கத்தை தடுக்க முற்பட்டாலும். புது புது உத்திகளை கண்டறிந்து அதன் மூலம் தொடர் கடத்தலில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஈடுபட்டுத்தான் வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பரங்கிமலையில் உள்ள ஜோதி திரையரங்கு அருகில் கடந்த சில நாட்களாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனம் ஒன்று நின்றுள்ளது. இந்த வாகனம் தொடர்பாக  வந்த தகவலின் பேரில் புனித தோமையார் காவல் நிலைய காவலர்கள் அந்த வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது வழக்கறிஞர்கள் இருவர் வாகனத்தை சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வாகனத்தை திறந்து  பார்த்தபோது வாகனத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. வாகனம் யாருடையது என்பதையும்,சென்னைக்கு 100 கிலோ அளவிலான கஞ்சா வந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த வாகனம் மற்றும் கஞ்சா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close