மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 08:44 pm
scattered-view-of-the-transformer-in-metro-station

உயர் மின் அழுத்த கோளாறு காரணமா,  சென்னை மெட்ரோ நிர்வாகம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 நாட்களாக, சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் ஓட்டம் உயர் மின்அழுத்த கோளாறு காரணமாக தடைபட்டு வந்தது. இதனால் சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணச்சீட்டு வழங்குவது, ரயில் ஓட்டம் தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது. இதற்கிடையே நேற்றிரவு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலும், நங்கநல்லூர் ரயில் நிலையத்திலும் உயர் அழுத்த மின் கசிவு காரணமாக ரயில் ஓட்டம் பாதிப்பிற்குள்ளானது. பின்னர் அது சரிசெய்யபட்டு ரயிலின் இயக்கம் சீரானதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தினுள் நேற்றிரவு மின்மாற்றி வெடித்து விபத்து ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மின்மாற்றி வெடித்து ஆங்காங்கே சிதறும் இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. பயணிகள் இல்லாத நள்ளிரவு நேரம் என்பதால் இந்த விபத்தின் காரணமாக பெரிய அளவு சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், இதுபோன்ற பாதுகாப்பு விஷயத்தில்  மெட்ரோ நிர்வாகம் கவனம் செலுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மெட்ரோ நிர்வாக மேற்பார்வையாளர்கள் பராமரிப்புப் பணிகளை சீராக்க வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளனர் மெட்ரோ பயணிகள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close