காதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 08:59 am
love-affair-college-student-stabbed-to-death-by-fellow-students

சென்னையில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி முன்பு மாணவன் ஒருவன் சக மாணவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை அமிர்தா ஓட்டல் மேனஜ்மென்ட் டெக்னாலஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கென்டமெலா ஷெவன்குமார்(20). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் தங்கி படித்து வருகிறார். இவர், அதே கல்லூரியில் படிக்கும் சண்முகம் என்ற மாணவரின் உறவுப் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல முறை ஷெவன் குமாரை மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, ஷெவன் குமாருடன் சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்முகம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷெவன் குமார் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், ஷெவன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதன், ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்த சண்முகம் என்ற மாணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close