கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 09:27 am
young-man-drowns-in-mud-dies

சேலம் காட்டூர் பகுதியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் குரங்குசாவடி அருகே உள்ள நரசோதிப்பட்டியைச் சார்ந்தவர் கோபிநாத் (27).  இவர், அழகாபுரம் அருகே உள்ள காட்டூர் பகுதியில், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காட்டூர் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்துவிட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வனிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கபட்டன.

அப்போது, கோபிநாத்தும் தனது பட்டறையை மூடிவிட்டு, தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள, தரைமட்ட கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, கோபிநாத் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி, தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லாததால் கிணற்றில் இருந்து மேலே வந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அழகாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சுமார் மூன்று மணி நேரம் தேடி உடலை மீட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close