கணவனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி மற்றும் மகனை தேடும் போலீஸ்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 06:35 pm
wife-who-murdered-her-husband-in-salem

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள இராமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி தங்க மாரிமுத்து. இவருக்கு வள்ளியம்மாள் என்கிற மனைவியும், லோகநாதன் என்னும் மகனும் உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப கருத்து வேறுபாட்டால், வள்ளியம்மாள் தனது மகன் லோகநாதனுடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

 இந்நிலையில், வள்ளியம்மாள் தனது மகனுடன் நேற்றிரவு 10 ஏக்கர் காலனிக்கு வந்துள்ளார். அங்கு விவசாய தோட்டத்தில் தனது உறவினர் ஒருவருடன்  தங்கியிருந்த தங்க மாரிமுத்துவிடம், வள்ளியம்மாளும் அவரது மகனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரிமுத்துவுடன் இருந்த நபர் குடும்ப தகராறில் தலையிட விரும்பாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் திரும்பி வந்த அவர், தங்க மாரிமுத்து இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆத்தூர்  போலீஸார், பிரேதத்தை கைப்பற்றி, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். தங்க மாரிமுத்துவை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது மனைவி மற்றும் மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close