சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் 3 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 01:09 pm
chennai-convicts-arrested-by-police

சென்னையில்  தலைமறைவு குற்றவாளிகளான பிரபல ரவுடிகள் 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 40 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றாவாளியான கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரவுடி அம்பேத் (எ) அம்பேத்கர், பிரபல தாதா தனசேகரனின் நெருங்கிய கூட்டாளியாவார். இவர் கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தென்னரசுவை கொன்ற வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இந்நிலையில், தென்னரசுவின் தம்பியான பாம் சரவணனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி , அதற்கான ஏற்படாகளைச் செய்வதற்காக அம்பேத் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேர் பல்லாவரம் அருகே தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற புளியந்தோப்பு ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல் துறையினர், பதுங்கியிருந்த ரவுடி அம்பேத் என்கிற அம்பேத்கர்(33), மற்றும் அவனது கூட்டாளிகளான புளியந்தோப்பைச் சேர்ந்த ஸ்டீபன்(33), குகன்(30) ஆகிய மூவரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் எண்ணூரில் நடந்த ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் பால் கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close