சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.ஏ.ராமன் பொறுப்பேற்றார்!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 01:15 pm
salem-collector-takes-charge-today

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திரு எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த திருமதி ரோகினி, சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று வேலூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக  நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ. ராமன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்ட படிப்பும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்ட படிப்பும் படித்துள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

பின்னர் 2010ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நியமனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும், பின்னர் 2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது பணியிடமாறுதல் செய்யப்பட்ட பிறகு சேலம் மாவட்ட ஆட்சியராக திரு எஸ்.ஏ.ராமன் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close