சென்னை: மருத்துவர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 03:34 pm
chennai-gold-theft-in-doctor-s-house

சென்னை பெரம்பூரில் ரயில்வே மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் குமார். இவர் கடந்த மாதம் 27 - ஆம் தேதி தனது மகனின் நீட் தேர்வுக்காக மனைவியுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்கு சென்றுள்ளார். 

 ஊருக்குக் கிளம்புவதற்கு முன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அவருடைய வீட்டில் வேலைபார்த்து வந்த சந்தோஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். மேலும், தனது படுக்கையறையை மட்டும் பூட்டி, சாவியைக் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். 

அவர் சென்றதற்கு பின் வீட்டை தினந்தோறும் திறந்து சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பூட்டிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் சந்தோஷ். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பூட்டை திறந்த சந்தோஷ், படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், இது தொடர்பாக ஒடிசாவில் உள்ள தனது முதலாளியான குமாருக்கும் தகவல் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து குமார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஐ.சி.எஃப் காவல்துறையினர் வீட்டை பார்வையிட்டனர். மேலும், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் படுக்கையறை பூட்டை உடைத்த நபர்கள் பீரோவை திறந்து அதிலிருந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததைக் கண்டுபிடித்தனர். வீட்டின் வெளிப்பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close