போர் போட்ட இடத்தில் தென்னை மர உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 04:36 pm
water-raises-like-a-fountain-in-a-borewell-in-tirunelveli

நெல்லை மாவட்டம் சிறுகன் குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் ஆழ்துளை குழாய் அமைக்க போர் போட்ட போது தென்னை மரம் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சென்னை மற்றும் புறநகரில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிடிப்பதற்காக மக்களின் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல நூறு அடிகளுக்கு ஆழ்துளை குழாய் அமைக்க போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிறுகன் குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் ஆழ்துளை குழாய் அமைக்க போர் போடப்பட்டது.

அப்போது திடீரென ஆழ்துளை குழாயிலிருந்து தென்னை மரம் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனை பார்த்த மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close