மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 04:48 pm
trichy-husband-suicide-after-wife-dead

திருச்சி தொட்டியம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அப்பணநல்லூர் சபாபதி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், தனது மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இன்று காலை 7 மணி அளவில் தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுந்தாலும், இருவரின் பாச பிணைப்பை நினைத்து நெகிழ்ச்சியடையவும் செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close