சட்டப்படிப்புக்கான வகுப்புகள் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 09:04 am
adjournment-of-classes-for-law-university

சென்னை பெருங்குடியில் உள்ள சட்டப்பல்கலைக்கழக கல்லூரியில், பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டப்படிப்புக்கான வகுப்புகள் தொடங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருங்குடி சட்டக்கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான சட்டப்படிப்பு ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 13ஆம் தேதி கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதுகாப்பு காரணமாக ஜூலை 8ஆம் தேதி தொடங்கவிருந்த சட்டப்படிப்பு வகுப்புகள் வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தள்ளிப்போகும் நாட்கள் சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடுசெய்யப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close