பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 10:16 am
irrigation-water-from-barur-lake-opened

முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து  ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட முதலமைச்சர் இன்று முதல் வரும் நவம்பர் 13ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டார். 

அதன்படி, இன்று பாரூர் ஏரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தண்ணீர் திறந்துவிட்டார். பாரூர் பெரிய ஏரி நீரால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள   2397  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close