தங்கையின் காதலனை கொலை செய்த அண்ணன்!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 01:08 pm
brother-who-killed-her-sister-lover

திருச்சியில் தங்கையின் காதலனை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (30). இவரும் பாலக்கரை பசுமடம் பகுதியை சேர்ந்த நிவேதா (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு சத்திய நாராயணன் அவரது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, பசுமடம் நாகம்மாள் கோவில் அருகே காதலியின் அண்ணன் வினோத் அவரை வழிமறித்து தனது தங்கையை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், பீர் பாட்டிலால் சத்திய நாராயணன் தலையில் அடித்தும், வயிற்றில் குத்தியும் உள்ளார். 

படுகாயமடைந்த சத்திய நாராயணன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய வினோத் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close