வி.ஏ.ஓ வை கொலை செய்ய முயன்ற லாரி உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 04:15 pm
lorry-owner-sentenced-to-6-years-for-murder-attempt-on-vao

திருச்சியில் வி.ஏ.ஒ வை கொலை செய்ய முயன்ற லாரி ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திருச்சியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில்,குடமுருட்டி பாலம் அருகே கடந்த ஆண்டு ஜீன் மாதம் 27 ஆம் தேதி திருச்சி டவுன் கிராம நிர்வாக அலுவலர் குமாரவேல் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக திருட்டு மணல் ஏற்றி சென்ற லாரியை குமாரவேல் தடுத்து நிறுத்தினார். 

அப்போது லாரியை இயக்கி வந்த லாரி உரிமையாளர் சாகுல் ஹமீத்(46) மற்றும் அவரது உதவியாளர் சிவா(29) ஆகியோர் குமாரவேலை மிரட்டியதோடு, அவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.  இது குறித்து குமாரவேல் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் சாகுல் ஹமீத், சிவா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. மணலை திருடியதற்காக இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக  ஐந்து வருடம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார், இதனையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close