தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகளைக் கொண்டு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள 4ஆவது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால், 4ஆவது அலகின் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
newstm.in